Tamil News  /  Astrology  /  Lords Rahu And Mercury Together Will Give Us Luck

Rahu and Mercury: அள்ளிக் கொட்ட போகும் ராகு புதன்.. யோகத்தை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 01:58 PM IST

Rahu and Mercury: ராகுவும் புதனும் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

ராகு மற்றும் புதன்
ராகு மற்றும் புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான்

இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மார்ச் மாதம் புதன் பகவான் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் நுழைகின்றார்.

இதன் காரணத்தினால் ராகு மற்றும் புதன் இவர்கள் இருவரும் சேருகின்றனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடக்க உள்ளது. இவர்களுடைய சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் உண்டாகும். பேச்சுத் திறமையால் காரியங்கள் வெற்றியாக முடிவடையும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முடிவுகள் அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் ராகு பகவான் மற்றும் புதன் பகவான் இருவரும் சேர்கின்றனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். இந்த காலத்தில் உங்களுக்கு அதிகமான வாய்ப்புகள் தேடி வரும். திட்டமிட்ட காரியங்கள் நடக்கும் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.