Lord Venus: மீன ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவான்.. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள்
Lord Venus: மீன ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Lord Venus: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு கால இடைவெளியில், ஒவ்வொரு ராசிக்குப் புலம் பெயர்கின்றன. இதனால் சில ராசியினருக்கு நன்மையும் சில ராசியினருக்கு தீமையும் உண்டாகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Mar 16, 2025 09:00 PMMarch 17 Tomorrow Rasipalan : வாரத்தின் முதல் நாளான மார்ச் 17 க்கான ராசிபலன் என்ன?
Mar 16, 2025 05:05 PMமார்ச் 17ஆம் தேதி துலாம் முதல் மீன ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 04:07 PMமார்ச் 17ஆம் தேதி மேஷம் முதல் கன்னி ராசி வரை.. ஆறு ராசிகளுக்கான பலன்கள்.. இதைக் கொஞ்சம் படிங்க!
Mar 16, 2025 02:55 PMமீனத்துக்குச் சென்ற சூரியன்.. பிற்போக்காக திரும்பிய புதன்.. சிக்கிய பணத்தை மீட்டு சிம்மாசனம் போட்டு அமரப்போகும் ராசிகள்
Mar 16, 2025 01:08 PMசூரியன் - புதன் - சுக்கிரன் சேர்க்கை.. படிப்படியாக லாபம் பெறும் மூன்று அதிர்ஷ்டக்கார ராசிகள்
Mar 16, 2025 10:43 AMமீன ராசியில் புதன் வக்ர நிலை.. தொழில் நெருக்கடியை அடித்து ஓட விடப்போகும் 3 ராசிகள்
சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவர், ஏப்ரல் 23ஆம் தேதி வரை மீன ராசியில் கட்டில் போட்டு ஓய்வு எடுக்கவுள்ளார்.
இதனால் பல்வேறு யோகங்கள் உண்டாகின்றன. குறிப்பாக, மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவானால் மாளவ்ய ராஜயோகம் உண்டாகியுள்ளது. புதன் மீன ராசியில் பெயர்ந்து இருப்பதால், பணத்தை தரக்கூடிய லட்சுமி நாராயண யோகம் உண்டாகியுள்ளது. தவிர, மீனத்தில் சஞ்சரிக்கும் ராகுவுடன் இணைந்து சுக்கிரன் பெயர்வதால், விபரீத ராஜயோகம் உண்டாகிறது.
சுக்கிர பகவான் மீன ராசியில் சஞ்சரிப்பதால் உண்டாகும் பலன்கள் குறித்துக் காண்போம்.
மீன ராசி: சுக்கிரன் நன்மை தரக்கூடிய கிரகமாகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் சுக்கிர பகவான், மீன ராசியினருக்கு பல நன்மைகளைத் தரவுள்ளார். தொழில் செய்யும் மீன ராசியினருக்கு முன்பு இருந்த எதிரிகளின் தொல்லை ஓரளவு மட்டுப்படும். புத்திர பாக்கியம் இல்லாமல் தவிக்கும் மீன ராசியினருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பொதுவெளியில் உங்களுக்கும் உங்கள் பெயருக்கும் என தனி மரியாதை உண்டாகும். சமூக சேவைகளில் ஈடுபடுவீர்கள். உடல் பொலிவு பெறும். இத்தனை நாட்களாக உங்களுக்கு என்று இல்லாத நண்பர்கள் கூட்டம் இக்காலத்தில் உருவாகி, உங்களது சொல்பேச்சுகளைக் கேட்டு செயல்படுத்துவர்.
துலாம் ராசி: மீன ராசியில் சுக்கிரன் தற்போது சஞ்சரித்து வரும் நிலையில் துலாம் ராசியினருக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கப்போகின்றன. துலாம் ராசியினர் சிக்கியிருந்த வம்பு மற்றும் வழக்குகளில் இருந்து விடுதலை ஆவீர்கள். இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் கடன்பட்டு இருந்தால், அதைப் போக்கும் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்து தொழில் முனைவோருக்கு நல்ல ஒரு லாபம் கிட்டும். உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பல நாட்களாக தராமல் இருந்தவர்களுக்கு இந்த காலத்தில் புத்தி வந்து பணத்தை கொடுத்துப் போவர். உங்கள் கடின உழைப்புக்கு இந்த காலத்தில் அங்கீகாரம் கிடைத்து புரோமோசன் அடைவீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இக்காலத்தில் புத்திர பாக்கியம் உண்டாகும். வீட்டில் இருந்த அமைதியின்மை நீங்கும். கலகலப்பு வீட்டில் நீடிக்கும்.
தனுசு: சுக்கிரன் மீன ராசியில் பயணிப்பதால், தனுசு ராசியினருக்கு வாழ்க்கையில் நிம்மதி கை கூடும். இத்தனை நாட்களாக வீட்டில் நல்ல காரியமே நடக்கவில்லை என்று வருத்தப்படும் தனுசு ராசியினருக்கு இனி சுக நிகழ்வுகள் நடக்கும். அரசின் பொது வாகனங்களில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு, சொந்த வாகனமே வாங்கும் சூழல் வாய்க்கும். சமூக சேவையில் ஈடுபடும் நபர்களுக்கும், அரசியல் கட்சியில் பயணிப்பவர்களுக்கும் நன்மைகள் அதிகமாக நடக்கும் காலகட்டம் இது. குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்