Sukran Luck: கடக ராசியில் ஏறும் சுக்கிரன்.. 3 ராசிகளுக்கு கூரையைப் பிய்த்து கொட்டப்போகும் நல்வாய்ப்பு!
Sukran Luck: கடக ராசியில் ஜூலை மாதம் 7ஆம் தேதி பெயர்ச்சியாகும் சுக்கிரனால், 3 ராசிகளுக்கு கூரையைப் பிய்த்து கொட்டப்போகும் நல்வாய்ப்பு குறித்துப் பார்ப்போம்.
Sukran Luck: கடக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி: ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர்.
கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.
கடக ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிர பகவான்:
சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசியினருக்கு நேர்மறையான தாக்கத்தையும் சில ராசியினருக்கு எதிர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கக் கூடியது. சுக்கிர பகவான், பணம், திறமையான பேச்சு, குடும்பத்தில் திருமண வாழ்வு, புத்தி, சாதுர்யம் ஆகியவற்றின் காரணகர்த்தாவாகவுள்ளார்.
தற்போது, சுக்கிரன் மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிக்கவுள்ளார்.
சுக்கிர பகவான் ஜூலை மாதத்தில் 7ஆம் தேதி காலை கடக ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். அங்கு சுக்கிர பகவான், ஜூலை 30ஆம் தேதி வரை சஞ்சரிக்கப் போகிறார். கடக ராசியில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சுக்கிர பகவானின் இயக்கத்தால் எந்த ராசிக்காரர்கள் பெரிதும் பயனடையப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்:
சுக்கிர பகவானின் கடக பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த குடும்பச் சூழல் வாய்க்கும். நீங்கள் உங்கள் காதலருடனோ அல்லது காதலியுடனோ டேட்டிங் செல்லலாம். வருமானத்தை அதிகரிக்க புதிய ஆதாரங்களைப் பெறலாம். புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. வசீகரம், ஆடை, அலங்காரங்களில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மிதுனம்:
கடக ராசியில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். பணியிடத்தில் முதலீடு செய்ய நினைத்தால், நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெறலாம். இது லாபகரமானதாக மாறும். சுற்றுலா செல்வீர்கள். பொருளாதார ரீதியாக லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் காதல் கைகூடும். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மற்றும் மனை வாங்கும் யோகம் வாய்க்கும். பொறுமையும் நிதானமும் கை வந்து சேரும். குடும்பத்தில் அன்பு பெருகும்.
கடகம்:
கடக ராசியில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி, கடக ராசியினருக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. வரப்போகும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் காதலும் ஈர்ப்பும் நிலைத்திருக்கும். தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும். குழந்தையில்லாத கடக ராசியினருக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும். சிறு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. பணியிடத்தில் புதிய பணிகளை மேற்கொள்ள முடியும். தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் நீங்கள் நிலையானவராக இருப்பீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
டாபிக்ஸ்