தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lord Venus Has Entered Lord Guru Bhagavan Meena Rasi On March 31st

சுக்கிரன் இன்று மாறிவிட்டார்.. அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. மூன்று ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 31, 2024 05:46 PM IST

சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிரன் குரு பகவான் ராசியான மீனராசிகள் நுழைந்துள்ளார். சுக்கிர பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது.

சுக்கிரன்
சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிரனின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

இதுவரை சனி பகவான் ராசி கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் சுக்கிரன். சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி இன்று குரு பகவான் ராசியான மீனராசியில் நுழைந்துள்ளார். சுக்கிர பகவானின் மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக கைகூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில்லை என்று குறைவும் இருக்காது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். உங்களுக்கு ஆளுமை திறன் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆராய்ச்சி துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணவரவில் எந்த குறையும். இருக்காது வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். 

வாழ்க்கை பணியில் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் திருமண பாக்கியம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel