தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பண மூட்டையை பிரிச்சு கொட்டப் போகிறார் சுக்கிரன்.. வாரி கொள்ள போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

பண மூட்டையை பிரிச்சு கொட்டப் போகிறார் சுக்கிரன்.. வாரி கொள்ள போகும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
May 11, 2024 03:49 PM IST

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிகள் நுழைகின்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார்.

பண மூட்டையை பிரிச்சு கொட்டப் போகிறார் சுக்கிரன்.. வாரி கொள்ள போகும் ராசிகள்
பண மூட்டையை பிரிச்சு கொட்டப் போகிறார் சுக்கிரன்.. வாரி கொள்ள போகும் ராசிகள்

சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, காதல், அழகு, அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிகள் நுழைகின்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு ரிஷப ராசிக்கு செல்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜ பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் திருமணம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டத்தொழில் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அந்த அளவிற்கு சிறப்பான பலன்கள் இருக்காது. கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிறைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் உண்டாகும்

கடக ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel