12 வருடங்களுக்குப் பிறகு.. குரு சூரியன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு பண மழை.. உங்க ராசி இருக்கா?
Aries: ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது குருபகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார்.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் உச்ச அதிகாரங்கள் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 05:27 PMசனி கொட்டிக் கொடுக்க வருவார்.. பண மழை கொட்டி தீர்க்கும் ராசிகள்.. முன்னேற்றம் வருவது யாருக்கு?
May 13, 2025 02:08 PMகுரு பெயர்ச்சி.. நாளை முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும்.. அதிர்ஷ்டம் அதிகம்.. பணவரவு!
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதன் காரணமாக இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான்.
ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சூரிய பகவான் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது குருபகவானோடு சூரிய பகவான் இணைந்துள்ளார். இவர்களுடைய சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கின்றது.
வரும் மே மாதம் ஒன்றாம் தேதி வரை இந்த சேர்க்கை நீடிக்கும். அதற்குப் பிறகு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார் தற்போது குரு மற்றும் சூரியன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை மூன்று ராசிக்காரர்கள் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் மற்றும் குரு சேர்க்கை நிகழ்ந்துள்ளது இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். செல்வம் செழிப்பு உங்கள் வாழ்க்கையில் பெருகும்.
கடக ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீன ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு நினைவிலிருந்து வேலைகள் முடிவடையும். முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை மற்றவர்களிடம் சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
