Lord Saturn: சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி.. நின்று வெல்லும் அதிர்ஷ்ட ராசிகள்!
Lord Saturn: சனி பகவான், கும்பராசியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் புலம்பெயர்வதால் நன்மை பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Lord Saturn: ஒன்பது கிரகங்கள் உள்ளன. இதில் மிக மெதுவாக நகரும் கிரகமாக சனி பகவான் இருக்கிறார். ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நீதிமானாக செயல்படக் கூடியவர். அதன்படி, சனி பகவான், கும்ப ராசியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் ஆளுமை செலுத்துபவராக குரு பகவான் இருக்கிறார். இந்நிலையில் குரு பகவானின், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்லதிர்ஷ்டம் பெற்றவர்கள்.
இதற்கிடையே ஏப்ரல் ஆறாம் தேதி, இன்று மாலை 3:55 மணிக்கு சனி நட்சத்திர மாற்றம் அடைகிறார். இதனால் சில ராசியினர் பல நன்மைகளைப் பெறவுள்ளனர்.
மேஷம்: இந்த ராசியினருக்கு சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் முன்பு இருந்ததை விட பொருளாதார முன்னேற்றம் அதிகம் கிடைக்கும். உடல்நலப் பாதிப்பு நீங்கும். வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் சேமிப்புத்தொகை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்தை அடையாமல் தவித்துக்கொண்டிருப்பவர்கள் இந்த சனி பகவானின் நட்சத்திரப்பெயர்ச்சியால் முன்னேற்றத்தைப் பெறுவார்கள். இத்தனை நாட்களாக எதிரிகள் மூலம் கிடைத்து வந்த தொல்லை அகலும். வெகுநாட்களாக சைடு பிஸினஸ் செய்ய நினைத்தவர்கள், கண்டிப்பாக இக்காலகட்டத்தில் சைடுபிசினஸ் செய்து வெற்றி பெறுவார்கள்.
கன்னி: இந்த ராசியினருக்கு சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் இதற்கு முன்பு இருந்த குழப்பமான மனநிலை மாறும். வீட்டிலும் பணியிடத்திலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் ஒரு வழியாக முடிவுக்கு வரும். வெகுநாட்களாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சித்தவர்களுக்கு, இந்த காலகட்டத்தில் முயன்றால் வெளிநாடு செல்வீர்கள். மந்தமாக இருந்த உங்கள் புத்தியில் கிரக நிலை மாற்றத்தால், புதிய தெளிவு கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். இதற்கு முன்பு பெற்ற கடன்களை எல்லாம் அடைப்பீர்கள்.
விருச்சிகம்: இந்த ராசியினருக்கு, சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் உடல்நலம் மேம்படும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். வெவ்வேறு இடங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இந்த காலத்தில் சுயதொழில் செய்தால் கணிசமான லாபம் ஈட்டலாம். வெகுநாட்களாக முயன்று வந்த வேலை கிடைக்கலாம். முன்கோபத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது. உங்களது தவறுகளை நீங்கள் பகுத்தறிந்து தெளிவு பெறுவீர்கள்.
தனுசு: இந்த ராசியினருக்கு, சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் ஓரளவு நல்ல பலன் கிடைக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு இடையே நடந்த பிரேக்அப் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து, மீண்டும் சேர்வர். திருமணம் ஆனவர்களுக்கிடையே இருந்த பிரச்னைகள் சுமூகமாக முடியும். வெகுநாட்களாக வரன் தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல வரன் அமையும். இத்தனை நாட்களாக, நீங்கள் எந்தவொரு தொழில் செய்தாலும் சரியான வளர்ச்சியில்லாமல் இருந்தால், இக்காலகட்டத்தில் உங்களுக்கு ஏறுமுகமாக இருக்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
மகரம்: இந்த ராசியினருக்கு, சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால், சொந்த பந்தம் மற்றும் நட்புகள் மத்தியில் நன்மைகள் பெருகும். சனி பகவானின் அருள் ஆசியால், இழந்த நிலம், பொருள் ஆகியவை ஏதாவது ஒரு வழியில் நம் கை வந்து சேரும். சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் பணியில் இருக்கும் நெருக்கடியை சமாளியுங்கள். ஜவுளிப்பொருட்கள், ஃபர்னிச்சர்களை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதுமையான மாத்தியோசி எண்ணங்களுடன் தொழிலில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ஜங்க் ஃபுட், எண்ணெய்ப் பொருட்கள் ஆகியவற்றை உண்பதைத் தவிர்க்கவும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்