Lord Sani: அடிமேல் அடிகொடுத்து அணைத்துக் கொள்ளும் சனி.. பின் வாழ்க்கையில் கோடீஸ்வரர்கள் ஆகும் ராசிகள்
Lord Sani: 12 ராசிகள் இருந்தாலும் மூன்று ராசிகளுக்கு, பிறந்து 30 ஆண்டுகளுக்குப் பிந்தைய வாழ்க்கையில் சனி பகவான் நன்மைகளைப் புரிகிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பது குறித்துப் பார்ப்போம்.

Lord Sani: ஜோதிடத்தில் நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’என்பர்.
இந்நிலையில் ஒவ்வொருவரின் ராசியைப் பொறுத்தும், ஒவ்வொருத்தருக்கும் பொருளாதாரம், சுக துக்கங்கள் நடக்கின்றன. ஜோதிடத்தில் சனி பகவான், ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது நீதி மானாக செயல்படுகிறார். அவர்களது செயல்களைப் பொறுத்து அவருக்கு அப்படியே பலன் தருகிறார். சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்து, இன்னொரு ராசிக்கு சஞ்சரிக்கிறது. மேலும் ஒரு ராசியில் ஆளுகைச் செலுத்தியபின், 30ஆண்டுகளுக்குப் பின், அந்த ராசிக்கு மீண்டும் வருகிறது.
சனி கிரகத்தின் பண்பு:
சனி பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார் என்றால், உங்களுக்கு ஆயுளைக் கட்டியாகத் தரக்கூடியவர். சனி பகவான் ஒரு கண்டிப்பான ஆசிரியருக்குச் சமம் ஆனவர். சனி பகவான், ஒருவரின் ராசியில் ஆறாம் ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால் கடன், எதிரி மற்றும் நோய்களை உண்டு செய்துவிடும். சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணித்தால் பூர்வீக வழியில் ஏதேனும் சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. பன்னிரெண்டாம் வீட்டில் சஞ்சரித்தால் வம்பு வழக்குகளில் சிக்குவீர்கள். பிணியில் அவதிப்படுவீர்கள்.
ஒரு ஜாதகதாரர் சனி பகவானால் பாதிக்கப்பட்டால் தேவையற்றப் பணித் தடைகள், பலரால் ஏமாற்றப்படுவது, தன்னம்பிக்கை, மனச்சோர்வு, குழப்பமான மனநிலை, சோம்பேறித்தனம் ஆகியவற்றைத் தருகிறார்.
ஒருவருக்கு ஒருவர் சனி பகவானின் ஆளுகையால், அவருக்குக் கிடைக்கும் பண்புகளும் வேறுபடுகின்றன. சில ராசியினருக்குப் பிறந்த 30ஆண்டுகளுக்குப் பின், சனி பகவான் நன்மைகளைப் புரிகிறார். அத்தகைய ராசியினர் பற்றி அறிந்துகொள்வோம்.
கன்னி:
கன்னி ராசியினர் பிறந்தவுடன் சனியின் தாக்கத்துக்கு ஆளாகி பல்வேறு இன்னல்களைச் சந்தித்து இருப்பர். இவர்களுக்கு சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, பல நன்மைகளைச் செய்கிறார். கன்னி ராசியினர் அடிப்படையில் சுறுசுறுப்பானவர்கள் மற்றும் யாருக்கும் எந்தவொரு தீங்கும் செய்யாதவர்கள், தவறான வழியில் பொருள் ஈட்டாதவர்கள். இதனால், இந்த ராசியினர் தன்னுடைய சிறுவயதில் சிரமப்பட்டாலும், பின் வாழ்க்கையில் ஆளுமைப் பண்புடன் இருக்கிறார்கள். இருப்பினும், பின்னால் நடக்கும் விஷயங்களை கணித்து முன் கூட்டியே செயல்படக்கூடியவர்கள். இந்த ராசியினருக்கு 30 வயதுக்குப் பிறகு, பூர்வீக உரிமைகள் மூலம் வளர்ச்சியான பலன்கள் கிடைக்கும்.
மகரம்:
இந்த ராசியினர் ஜாதகத்தில் சனி பகவானின் தாக்கத்தால் பிறந்தவுடன் கெடுபலன்களைச் சந்திப்பர். மகர ராசியினருக்கு நற்பேறு மற்றும் நல்வாய்ப்பு 30 ஆண்டுகள் கழித்து கிடைக்கும். இந்த ராசியினருக்கு சனி பகவான், அதிபதியாக இருக்கிறார். இதனால் மகர ராசியினருக்குப் படிப்படியாகவே சனி பகவான் நல்லது செய்கிறார். இவர்களின் கடின உழைப்பும் சரியான ரிஸ்க்கும் இவர்களுக்கு வேறு ஒரு கட்டத்தில் பணமாக மாறும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மகர ராசியினருக்கு வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும். காரில் செல்லும் சூழ்நிலை வரும்.
கும்பம்:
கும்பராசியினருக்கும் அதிபதி சனி பகவான் ஆவார். ஜோதிடத்தின்படி, கும்ப ராசியினர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நல்ல வாழ்வினை வாழ்வார்கள். அதுவரை சனிபகவானின் தாக்கத்தால் துன்பமும் துயரமும் ஆட்டிப்படைக்கும். 30 வயதிற்குப் பிறகு தான், தொழில் மற்றும் பணியிடத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கும். அதன்பின் தான், வாழ்வில் சம்பாதித்த பணத்தைச் சேமிக்கும் சூழல் உண்டாகும். வெற்றி உண்டாகும். கும்ப ராசியினரின் மணவாழ்க்கையும் முப்பது வயதுக்குப் பின்,அமைந்தால் சுபிட்ஷமாக இருக்கும். இல்லையென்றால், சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும்.கும்ப ராசியினர் தாங்கள் எட்ட நினைத்த உயரத்தை வாழ்நாளில் எப்பாடுபட்டாவது எட்டிவிடுகிறார்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்