சனிப்பெயர்ச்சி: உச்சியில் நிற்கப்போகும் மகர ராசி.. பணமழையை கொடுக்கும் சனிப்பெயர்ச்சி..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனிப்பெயர்ச்சி: உச்சியில் நிற்கப்போகும் மகர ராசி.. பணமழையை கொடுக்கும் சனிப்பெயர்ச்சி..!

சனிப்பெயர்ச்சி: உச்சியில் நிற்கப்போகும் மகர ராசி.. பணமழையை கொடுக்கும் சனிப்பெயர்ச்சி..!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Mar 07, 2025 12:15 PM IST

சனிப்பெயர்ச்சி 2025: நவகிரகங்களிலேயே ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யக் கூடியது சனி பகவான் தான். அந்த வகையில் சனிப்பெயர்ச்சி 2025 மூலம் மகர ராசிக்காரர்கள் பெறப் போகின்ற யோக பலன்கள், பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

சனிப்பெயர்ச்சி: உச்சியில் நிற்கப்போகும் மகர ராசி.. பணமழையை கொடுக்கும் சனிப்பெயர்ச்சி..!
சனிப்பெயர்ச்சி: உச்சியில் நிற்கப்போகும் மகர ராசி.. பணமழையை கொடுக்கும் சனிப்பெயர்ச்சி..!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக் கூடியவர் சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார் அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் நவ கிரகங்களில் அதிக பலம் கொண்ட கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். நீதி நேர்மை நன்மை என அனைத்து நன்மைகளுக்குமான கடவுளாக சனி பகவான் திகழ்ந்து வருகின்றார்.

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய சனிபகவானில் இடமாற்றம் இந்த மார்ச் மாதம் நிகழப்போகின்றது. வருகின்ற 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இதே மீன ராசியில் சனிபகவான் பயணம் செய்யப்போகின்றார். 

நவகிரகங்களிலேயே ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யக் கூடியது சனி பகவான் தான். அந்த வகையில் சனிப்பெயர்ச்சி 2025 மூலம் மகர ராசிக்காரர்கள் பெறப் போகின்ற யோக பலன்கள், பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

மகர ராசி பலன்கள்

சனிபகவான் மீனராசிகள் இடமாறும்பொழுது உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருகிறார். இவர் உங்களுக்கு சகாய சனியாக அமைந்துள்ளார். உங்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும் உங்கள் ராசி அதிபதியாக விளங்கக்கூடிய சனிபகவான் அனைத்து விதமான யோக பலன்களையும் உங்களுக்கு கொடுப்பார் என கூறப்படுகிறது.

வாகனங்களில் சொல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது தவிர்ப்பது நல்லது. கெட்ட நட்புகளோடு பழகுவது உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் தேவை. குறிப்பாக முதுகு தண்டுவடம், வயிறு, நரம்பு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

சனிபகவான் உங்களுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் உங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. செய்தித் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும் என கூறப்படுகிறது.

சனிபகவானின் ஆசிர்வாதத்தின் மூலம் அனைத்து விதமான யோகங்களையும் பெறக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவராக திகழ்ந்து வருகின்றீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த வருத்தங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. சொந்தமாக முயற்சி செய்து முன்னேற்றம் அடைவதில் முனைப்பாக இருப்பீர்கள்.

எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது. இரண்டாவது வீட்டில் ராகு பகவானும், எட்டாவது வீட்டில் கேது பகவானும் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. புதிதாக சொத்துக்கள் வாங்கி குவிக்கும் யோகம் உங்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த பெயர்ச்சியாக அமையப்போவதாக கூறப்படுகிறது.

பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்

கேது பகவானை வழிபடுவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவிலுக்கு சென்று வழிபடுவது உங்களுக்கு நல்லது என கூறப்படுகிறது. குங்குமம், விபூதி, பசு நெய் உள்ளிட்டவைகளை சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி யாரிடம் வைத்து வழிபடுவது சிறந்த தின கூறப்படுகிறது.

அப்படி வழிபாடு செய்த குங்குமம் மற்றும் விபூதியை தினந்தோறும் பயன்படுத்தினால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. குறிப்பாக காது, மூக்கு, பல், வாய் மற்றும் நரம்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.