கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகும் ராகு.. டரியல் நீங்கி அம்சம் அநேகமாக முன்னேறும் 3 ராசிகள்
கும்ப ராசியில் சஞ்சரிக்கப்போகும் ராகு.. டரியல் நீங்கி அம்சம் அநேகமாக முன்னேறும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
பழங்கால ஜோதிடத்தின்படி, ராகு பகவான் அசுப கிரகமாகவும் நிழல் கிரகமாகவும் பார்க்கப்படுகிறார்.
இருந்தாலும் அசுப கிரகங்களான சனி தனது இறுதிக்காலத்தில் நன்மைகளைத் தருவதுபோல், ராகுவும் பிரச்னைகளைத் தீர்த்து நன்மைகளைத் தரக்கூடியவர்.
ஒன்பது கிரகங்களில் ராகு பகவானும் கேது பகவானும் பின் திசையில் பயணிக்கக் கூடியவர்கள் தான். அப்படி வைத்துப் பார்க்கும்போது ராகு பகவானும் கேது பகவானும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல 18 மாத காலத்தை எடுத்துக்கொள்வர். இந்நிலையில் மீன ராசியில் பயணித்து வரும் ராகு பகவான், விரைவில் சனி பகவானுடைய கும்ப ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். குறிப்பாக, 2025ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி, ராகு பகவான், கும்ப ராசியில் சஞ்சரிப்பார் என ஜோதிட சாஸ்திரங்கள் கணித்துள்ளன.
இப்படி ராகு பகவான் கும்ப ராசியில் சஞ்சரிக்கும்போது சில ராசியினருக்கு நன்மையும், பல ராசியினருக்குக் கெடுதலும் பலன்களாகக் கிடைக்கின்றன. இப்படி ராகுவின் சஞ்சாரத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
மேஷம்:
ராகு பகவான், மேஷ ராசியின் 11ஆவது இல்லத்தில் சஞ்சரிக்கிறார். ஆகையால் வெகுநாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் 2025ஆம் ஆண்டு நல்ல முறையில் முடிவடையும்.
ஒவ்வொரு பணிகளிலும் இருந்த மந்தத் தன்மை நீங்கி சுறுசுறுப்பு மற்றும் உத்வேகம் பிறக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய யோசனைகள் மூலம் தொழில் சிறக்கும். பொருளாதாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கடின உழைப்பினை விட ஸ்மார்ட் வொர்க் செய்பவர்களுக்கு நல்ல பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். கருப்பு எள் தானம் செய்வது சுய வாழ்க்கையிலிருக்கும் பிரச்னைகளை நீக்கும்.
கன்னி:
கன்னி ராசியின் 6ஆவது இல்லத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். ஆகையால், கன்னி ராசியினரின் துன்பங்கள் படிப்படியாக குறையும். வெகுநாட்களாக இருந்து வந்த உடல் நலக்குறைபாடு வெகுவாகக் குறையும்.
பணியிடத்தில் இருந்த அரசியல் பிரச்னைகள் ஓய்ந்து, உங்களின் குரல் மேல் இடத்தில் எதிரொலிக்கும். இருப்பினும், பணியிடத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில், அவர்கள் உங்கள் முதுகில் குத்தலாம். இருந்தாலும் உங்கள் முதலீடுகள் வீண் போகாது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசியின் 3ஆவது இல்லத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். இதனால், தனுசு ராசியினருக்குப் பெரிய அளவில் தடைகள் இருக்காது. இந்தக் காலத்தில் உங்களைச் சுற்றியிருந்த கெட்ட எண்ணங்கள் நீங்கும். பாஸிட்டிவ் மனநிலையில் திட்டமிட்டு காய்நகர்த்தினால், நீங்கள் இருக்கும் துறையில் உச்சத்தைத் தொட வாய்ப்புகள் உள்ளன. பிணி,பீடைகள் ஒழியும். உடல்நலன் மேம்படும். உங்களிடம் கடன்பெற்றுத் தராமல் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.
பொறுப்பு துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்