தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: புதன் விளையாட்டு ஆரம்பம்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.. பணத்தில் யோகம் பெறும் ராசிகள்

Money Luck: புதன் விளையாட்டு ஆரம்பம்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.. பணத்தில் யோகம் பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 03, 2024 10:49 AM IST

Lord Mercury: ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் விளையாட்டு ஆரம்பம்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.. பணத்தில் யோகம் பெறும் ராசிகள்
புதன் விளையாட்டு ஆரம்பம்.. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி.. பணத்தில் யோகம் பெறும் ராசிகள்

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் கடந்த மே மாதம் 31ஆம் தேதி அன்று தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார்.

ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த பல்வேறு விதமான தடைகள் குறையும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் தேடி வரும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மந்தமாக இருந்த வியாபாரம் வளர்ச்சி பெறும். புதிய ஆர்டர்கள் உங்களைத் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோரின் ஆதரவு முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் உயரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel