Lord Kubera: குபேரனுக்கு மிகவும் நெருக்கமான ராசிகள்.. பண மழையில் நனைப்பார்.. நீங்கதான் எப்போதும் ராஜா
Lord Kubera: செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் அருள் ஒரு சில ராசிகளின் மீது விழுகின்றது. இவருடைய அருள் ஆசி அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக விளங்கி வருகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Kubera: நவகிரகங்கள் அப்போது தங்களுக்கு இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் இடமாற்றத்தைப் பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுவார்கள் ஒரு சில கிரகங்கள் காலம் தாழ்த்தி தங்களது இடத்தை மாற்றுவார்கள்.
கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து வாழ்க்கையில் அனைத்து விதமான செயல்பாடுகளும் நடப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து ஒரு சில ராசிகளுக்கு நன்மைகளும் ஒரு சில ராசிகளுக்கு தீமைகளும் உண்டாகும்.
எந்த கிரக மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் கடவுள்களின் அன்பிற்கினிய ராசிகளாக விளங்கி வருகின்றன. கிரக மாற்றங்களால் பல்வேறு சூழ்நிலைகள் அவர்களுக்கு ஏற்பட்டாலும் கடவுள்களின் ஆசிர்வாதத்தால் அந்த ராசிகள் நிலையான முன்னேற்றத்தை பெற்றுக் கொண்டே இருப்பார்கள்.
அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக விளங்கக்கூடிய குபேர பகவானின் அருள் ஒரு சில ராசிகளின் மீது விழுகின்றது. இவருடைய அருள் ஆசி அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக விளங்கி வருகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
குபேர பகவானின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும். உலக இன்பங்களை அடைவதில் எப்போதும் வெற்றி பெறுவீர்கள். அனைத்து தேவைகளும் உங்களுக்கு குபேரன் பூர்த்தி செய்து கொடுப்பார் சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகின்றார். இருப்பினும் குபேர பகவான் உங்களுக்கு புகழ் பெருமை மரியாதை உள்ளிட்டவைகளை அள்ளிக் கொடுப்பார்.
துலாம் ராசி
குபேரனின் அருள் மற்றும் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு நினைத்த காரியங்களை அனைத்தையும் நிறைவேற்றுவதை குபேரன் பார்த்துக் கொள்வார். எத்தனை பெரிய கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். உங்களுக்கு எப்போதும் அருள் ஆசியை வழங்குவதில் குபேரன் தயங்குவது கிடையாது. ஏனென்றால் அவருக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர்.
கடக ராசி
குபேரனின் இஷ்ட ராசிகளில் நீங்களும் ஒருவராக திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் அவர் எப்போதும் உங்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். இதை அனைத்தையும் கொடுக்கக் கூடியவர் குபேரன். பொருளாதார ரீதியாகவும் மற்றும் தொழில் ரீதியாகவும் உங்களுக்கு குபேரன் நல்ல முன்னேற்றத்தில் கொடுப்பார்.
விருச்சிக ராசி
வேலையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக நீங்கள் உள்ளீர்கள். கடின உழைப்பால் எப்போதும் முன்னேறும் எண்ணம் கொண்டவர்கள் நீங்கள். இருப்பினும் குபேரனுக்கு நீங்கள் மிகவும் பிடித்த ராசிகள் என்பதால் பொருளாதாரத்தில் உங்களுக்கு சிக்கல்களை அவர் எப்போதும் கொடுப்பது கிடையாது. பண பற்றாக்குறை அவ்வப்போது உங்களுக்கு ஏற்பட்டாலும் நிலையான பயணத்தை குபேரன் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9