Lighting of Diya : வீடுகளில் இதுபோல் விளக்கேற்றி பாருங்கள்; செல்வக்கடலில் மிதப்பீர்கள்! அமைதியில் ஆர்பரிப்பீர்கள்!
Lighting of Diya : வீடுகளில் இதுபோல் விளக்கேற்றி பாருங்கள்; செல்வக்கடலில் மிதப்பீர்கள்! அமைதியில் ஆர்பரிப்பீர்கள்
பாரம்பரிய பழக்கம்
வீடுகளில் விளக்கேற்றுவது என்பது நமது பாரம்பரிய பழக்கம். மின்சாரம் இல்லாத காலத்தில் விளக்கேற்றுவது கட்டாயமாக இருந்தாலும், மின்சாரம் எங்கும் வந்தபின்னரும் வீட்டில் உள்ள பூஜையறை அல்லது சாமி படம் முன் விளக்கேற்றுவது குடும்பத்திற்கு நல்லது என்பது ஐதீகம். இருளை அகற்றும் ஒளி வீடுகளில் எப்போது விளக்கு ரூபத்தில் இருந்தால் வீட்டில் செல்வம் செழிகும் என்பதும் ஐதீகம்.
வேத காலம் முதலே விளக்கேற்றும் பழக்கம் இந்து மதத்தில் உள்ளது. விளக்கு அறிவின் பிரதிநிதியாகவும், அறியாமை எனும் இருளை போக்குவதாகவும் கருதப்படுகிறது. அக்னி தேவனுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. புனிதமாகவும் உள்ளது.
முக்கியத்துவம்
வீடுகளில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்வது மற்றும் பூஜைசெய்வது நமது வீடுகளில் நடக்கும் அன்றாட செயல்களுள் ஒன்று. கோயில் அல்லது வீட்டில் உள்ள கோயில் என எங்கும் வழிபாடு நடத்துவதற்கு விளக்குகள் ஏற்றப்படுகிறது. இது மத மற்றும் பக்தி சார்ந்த விஷயம் மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ள சக்திகளுடன் நமக்கு தொடர்பையும் இது ஏற்படுத்துகிறது. இது பல தலைமுறைகளாக நம்மிடையே பழக்கத்தில் உள்ளது. எனவே இதை நாம் மறந்துவிடக்கூடாது
கோயில்களிலும், வீடுகளிலும் ஏன் விளக்கேற்ற வேண்டும் என்பதற்கான காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தெய்வீக சக்தியின் இருப்பு
நாம் வீடுகளிலும், கோயில்களிலும் விளக்கு ஏற்றுவதற்கு முக்கிய காரணமாக, அதன் பக்தி மற்றும் தெய்வீக சக்தி காரணமாகிறது. நாம் ஏற்றிய தீபத்தை நாமாக அணைக்கக்கூடாது. எண்ணெய் முற்றிலும் குறையாத வரை அதை அப்படியே விடக்கூடாது. இது அந்த தீபம் தெய்வீகத்தின் இருப்பாக ‘கருதப்படுகிறது. ஒளி, வழிகாட்டியாக பல கலாச்சாரங்களில் கருதப்படுகிறது.
அதிக சக்தியை பெற விரும்புபவர்களுக்கு ஒளி ஒரு நல் வழிகாட்டியாகும். குறிப்பாக பக்தி மார்க்கத்தில் திளைக்க விரும்புபவர்களுக்கு ஒளி நல்வழிகாட்டும் என்று கருதப்படுகிறது. காலையில் நாம் விளக்கேற்றி வழிபாடு நடத்தினால், நாம் நமது தெய்வீக பயணத்தை தொடங்குகிறோம் என்று பொருள். அதில் அமைதி மற்றும் ஆசிரிவாதங்கள் கிடைக்கிறது.
புனித ஆற்றல்
விளக்கிள் ஒளி வீட்டை பிரகாசிக்க வைக்கிறது. ஒரு அறை அல்லது பெரிய கோயில் என எதிலும் பிரகாசம் வேண்டுமெனில் விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றும் இடத்தில் புனிதத்தன்மை ஏற்படுகிறது. பக்தர்கள் அமைதியை உணர்ந்து, வழிபாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். விளக்கின் ஒளி, தெய்வீக இருப்பை நமக்கு உணர்த்துகிறது. அனைவரையும் வெளி உலக தலையீடுகளில் இருந்து வெளியேற்றி உள்ளார்ந்து உணர்வுகளை பெறுவதற்கு வழிவகுக்கிறது.
புனிதத்தின் குறியீடு
நாம் குறிப்பிட்ட மெட்டல்களில் செய்த விளக்குகளைத்தான் வாங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளோம். அது மண் அல்லது பித்தளையால் செய்யப்பட்டது. இவை புனிதமான பொருட்கள் ஆகும். விளக்கேற்றுவது புனிதத்தின் அடையாளமாகிறது.
அது நம்மையும் நமது சுற்றுப்புறத்தையும் புனிதமாக்கி வலுவூட்டுகிறது. வீட்டில் விளக்கேற்றுவது ஒரு சிறிய செயல்பாடுதான், வீட்டில் உள்ள பல்வேறு எதிர்மறை ஆற்றல்களையும் போக்குகிறது. அனைத்து வகையிலும் விளக்கு புனிதமானது.
விழாக்காலங்களில் விளக்கேற்றவது
இந்து பாரம்பரியத்தில், விழாக்காலங்களில் விளக்கேற்றுவது, தெய்வீக சக்திகளை வீட்டிற்கு அழைப்பதாவும், அவற்றின் ஆசிர்வாதங்களை பெறுவதாகவும் கருதப்படுகிறது. மேலும் அந்த நாளில் எவ்வித துர் சம்பவங்களும் நடக்கூடாதை உறுதிசெய்வதற்காக நாம் தீபம் ஏற்றுகிறோம்.
விளக்குடன் தொடர்புடைய புனிதம், அனைவரும் திருவிழாவை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கலந்துகொள்வதற்காக செய்யப்படுகிறது. விழாக்காலங்களில் ஏற்றப்படும் விளக்குகள் ஒளியாக மட்டும் இல்லை, புனிதம் மற்றும் நேர்மறை எண்ணங்களின் குறியீடாகவும் உள்ளது.
கவனம் அதிகரிக்க உதவுகிறது
விளக்கின் மெல்லிய ஒளி, நீங்கள் தியானம் அல்லது கவனத்தை ஓரிடத்தில் குவிக்க உதவுகிறது. விளக்கின் ஒளியில் கவனம் செலுத்த பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை அவை வெளியேற்றி ஓரிடத்தில் கவனத்தை குவிக்க உதவுகிறது. ஒளியை உற்றுநோக்குவதால், மனம் அமைதியடைகிறது. அது மனஉறுதியை அதிகரிக்கிறது.
அதேபோல், படிப்பதற்கு முன் அல்லது ஏதேனும் செய்வதற்கு முன் தீபமேற்றினால், அது உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், மன ஒருமைக்கும் உதவுகிறது. நீங்கள் கவனம் செலுத்த விரும்பும் எதற்கு முன்னரும் தீபமேற்றுவது உங்களுக்கு உதவும். நீங்கள் விளக்கேற்றும்போது, உங்களை சுற்றியுள்ள அனைத்தும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி, மனதை அமைதிப்படுத்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்