Rasipalan: துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை ஜன.29 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Tomorrow Rasipalan: ஜோதிட கணக்கீடுகளின் படி, துலாம் முதல் மீனம் ராசி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு நாளை (புதன்கிழமை, ஜனவரி 29) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Tomorrow Rasipalan 29.01.2025: கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு ஆளும் கிரகம் உள்ளது, அது மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜனவரி 29 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு இது சாதாரண பலன்களைத் தரும்.
அந்தவகையில், நாளை (புதன்கிழமை) எந்த ராசிக்காரர்கள் பலனடைவார்கள், எந்த ராசிக்காரர்களின் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 2025 ஜனவரி 29 புதன்கிழமையான நாளை துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் நாளை மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருங்கள். நண்பரின் உதவியுடன் வியாபாரத்தில் முதலீடு செய்யலாம். வேலையில் பரபரப்பு ஏற்படலாம். பண வரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நாளைய நாள் சுமாரான நாளாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் மனம் நாளை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை நேர்காணல் போன்றவற்றில் வெற்றி பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே நாளை தந்தையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன சுகம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களிடமிருந்து பணம் பெறலாம். செல்வாக்கு மிக்க நபரை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத பண ஆதாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நாளை மன அமைதி இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார வருமானம் அதிகரிக்கும். நல்ல முதலீட்டு வாய்ப்புகள் இருக்கும்.
கும்பம்
கும்பம் ராசி அன்பர்களே உங்கள் மனம் நாளை அமைதியாக இருக்கும். பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடின உழைப்பு அதிகமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் நல்ல பலன் கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே கலை அல்லது இசை மீது நாட்டம் அதிகரிக்கும். உத்தியோக மாற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். உயர்ந்த பதவியை அடையும் வாய்ப்புக்கள் உருவாகும். வேலையின் நோக்கம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவழிப்பீர்கள். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்