துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவம்பர் 4 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவம்பர் 4 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவம்பர் 4 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

Marimuthu M HT Tamil
Nov 03, 2024 05:17 PM IST

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவம்பர் 4 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க என்பதை அறிந்துகொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவம்பர் 4 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை நவம்பர் 4 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

துலாம் - நவம்பர் 4ஆம் தேதி துலாம் ராசியினர் பொறுமையாக இருங்கள். தேவையற்ற கோபத்தைத் தவிர்க்கவும். துலாம் ராசியினரின் கல்விப் பணி மகிழ்ச்சியான பலனைத் தரும். ஒரு நண்பரிடமிருந்து நீங்கள் ஆடைகளை பரிசாகப் பெறலாம். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். தாயாரிடம் பணம் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் ஒரு தொழிலை செய்தால் நன்மையைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். முழு நம்பிக்கையும் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கலாம். உங்கள் ஈகோவை கீழே வைத்துவிட்டு, உங்களை சுயபரிசோதனை செய்து இல்வாழ்க்கைத்துணையுடன் சுமுகமாகப் போக முடிவுஎடுக்க வேண்டிய நேரம் இது.

தனுசு:

தனுசு ராசியினர் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். பேச்சில் இனிமை இருக்கும். பணியிடத்தில் சிரமங்கள் ஏற்படலாம். மேலும் கடின உழைப்பும் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்; செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

மகரம்: சில அறியப்படாத பயத்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள். இல்வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தாயின் அனுகூலம் கிடைக்கும். நண்பரின் உதவியால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கல்விப் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பகையுடன் இருப்பவர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள்.

கும்பம்:

நவம்பர் 4ஆம் தேதி கும்ப ராசியினர் மனதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வருமானம் குறையும், செலவுகள் அதிகரிக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொறுமையுடன் ஒவ்வொரு செயல்களையும் அணுகவும். வீட்டிலும் பொது இடத்திலும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

மீனம் - நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆனால் உற்சாகமாக இருப்பதைத் தவிர்க்கவும். பொறுமையாக இருங்கள். தாயின் ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். வருமானமும் அதிகரிக்கும். குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படலாம். அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, பெண் பிள்ளைகளின் தனிப்பட்ட விவகாரங்களில் நுழையாதீர்கள்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner