துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.13 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 13) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, நவம்பர் 13 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் உள்ளிட்ட 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
துலாம்
கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.
விருச்சிகம்
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. நன்மை நிறைந்த நாள்.
தனுசு
வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். நண்பர்களின் வழியில் குதூகலமான சூழல் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். நிலுவையில் இருந்துவந்த சரக்குகள் விற்பனையாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.
மகரம்
மின்னணு சாதனங்களில் சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர் வகையில் நன்மை உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். சொத்து பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும்.
மீனம்
பெற்றோர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உயர்வு நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்