இந்த 2025 செவ்வாய் பகவானுடையது.. மூன்று ராசிகள் வீட்டில் பணமழை அடை மழையாய் கொட்டும்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Lord Chevvai: எண் கணிதத்தின் படி இந்த 2025 ஆம் ஆண்டின் எண் 9 ஆகும் இந்த எண்ணின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். எனவே இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவானின் ஆசிர்வாதத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
Lord Chevvai: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார்.
செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு பல முக்கிய கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றிகின்றனர். இதனால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் ஆட்சி செய்ய போகின்றார். எண் கணிதத்தின் படி இந்த 2025 ஆம் ஆண்டின் எண் 9 ஆகும் இந்த எண்ணின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். எனவே இந்த 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவானின் ஆசிர்வாதத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மேஷ ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். முக்கிய விஷயங்களில் சிறப்பான முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடக ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்க போகின்றார். ஏனென்றால் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் .பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் 2025 ஆம் ஆண்டு செவ்வாய் பகவான் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கொடுக்க போகின்றார். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல வருவாய் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல வளர்ச்சியில் இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.