புத்தாண்டு தொடக்கத்தில் பொங்கல் வைக்க போகும் புதன்.. 3 ராசிகள் மீது பணமழை.. வியாபாரத்தில் முன்னேற்றம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புத்தாண்டு தொடக்கத்தில் பொங்கல் வைக்க போகும் புதன்.. 3 ராசிகள் மீது பணமழை.. வியாபாரத்தில் முன்னேற்றம்

புத்தாண்டு தொடக்கத்தில் பொங்கல் வைக்க போகும் புதன்.. 3 ராசிகள் மீது பணமழை.. வியாபாரத்தில் முன்னேற்றம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 01, 2025 02:48 PM IST

Lord Mercury: புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

புத்தாண்டு தொடக்கத்தில் பொங்கல் வைக்க போகும் புதன்.. 3 ராசிகள் மீது பணமழை.. வியாபாரத்தில் முன்னேற்றம்
புத்தாண்டு தொடக்கத்தில் பொங்கல் வைக்க போகும் புதன்.. 3 ராசிகள் மீது பணமழை.. வியாபாரத்தில் முன்னேற்றம்

புதன் பகவானின் இடமாற்றம் 19 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் ராசி மற்றும் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தற்போது பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டில் முதல் வாரத்திலேயே விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு செல்ல உள்ளார். புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு நல்ல யோக காலமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அனைத்து விதமான ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை முன்னேற்றமாக இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவில்லை என்று குறைவிலும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். கடினமான வேலைகளையும் செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner