ஜனவரியில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் சூரியன்.. 2025-ல் பண மழையில் நனையும் 3 ராசிகள்.. அதிர்ஷ்டம் பிச்சிக்கிட்டு கொட்டும்
Suriya Peyarchi: ஒரு வருடத்திற்கு பின்பு சூரிய பகவான் மகர ராசிக்கு செல்கின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர்.
Suriya Peyarchi: நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.
அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சூரிய பகவான் மகர ராசிக்கு செல்கிறார் இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும். ஒரு வருடத்திற்கு பின்பு சூரிய பகவான் மகர ராசிக்கு செல்கின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சிறப்பாக தொடங்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்து வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் தேர்வுகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு சூரிய பகவான் ஆசிர்வாதம் செய்வார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.