Pongal Luck Rasis: பொங்கலோ பொங்கல் ராசிகள்.. சூரியன் ஒளி வீசும் யோகம்.. தாறுமாறான ஆண்டு உங்களுக்குத்தான்!
Pongal Luck Rasis: சூரிய பகவானின் மகர ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Surya: நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட சூரிய பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அன்று மகர ராசிக்கு செல்கிறார். அன்றைய தினம் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானின் மகர ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.