குரு புதுப்பயணம்.. கயிறு கட்டி 2025-ல் தூக்க போகும் ராசிகள்.. பணக்கடலில் விழுவது யார்?
Jupiter Transit: மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.
![குரு புதுப்பயணம்.. கயிறு கட்டி 2025-ல் தூக்க போகும் ராசிகள்.. பணக்கடலில் விழுவது யார்? குரு புதுப்பயணம்.. கயிறு கட்டி 2025-ல் தூக்க போகும் ராசிகள்.. பணக்கடலில் விழுவது யார்?](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/03/550x309/guruuu_1735877591494_1735877601698.png)
Jupiter Transit: நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் குரு பகவான் கடந்த ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
குருபகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு ராஜயோகத்தை உருவாக்கி கொடுத்த போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திறமையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். செல்வம் மற்றும் பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
நிதி நிலை உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். மகிழ்ச்சியான அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றத்தை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுன ராசி
குருபகவானின் மிதுன ராசி பயணம் இந்த ஆண்டு நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகம் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் குரு பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். பொருளாதார சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். இல்லற வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கக்கூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி ராசி
குருபகவானின் மிதுன ராசி பயணம் இந்த 2025 ஆம் ஆண்டில் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உயர்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பத்தினரோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு யோகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)