18 வருடங்களுக்குப் பின்.. புதன் ராகு சேர்க்கை.. 2025 இல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. ராஜயோகம் வருது..!
Rahu and Mercury: ராகு மற்றும் புதன் சேர்க்கையானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
![18 வருடங்களுக்குப் பின்.. புதன் ராகு சேர்க்கை.. 2025 இல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. ராஜயோகம் வருது..! 18 வருடங்களுக்குப் பின்.. புதன் ராகு சேர்க்கை.. 2025 இல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. ராஜயோகம் வருது..!](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/02/550x309/rabu_1735815094318_1735815110813.png)
Rahu and Mercury: நவகிரகங்களில் அசப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கின்றார்.
ராகு பகவான் ஏற்கனவே மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற பிப்ரவரி மாதம் புதன் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இதனால் ராகு மற்றும் புதன் இருவரும் மீன ராசியில் சேர்கின்றனர். ராகு மற்றும் புதன் சேர்க்கையானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் ராகு மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கின்றது இதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வணிகத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதிக பணத்தை சம்பாதிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசி
உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நிதி நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)