2025-ல் டும் டும் டும் நட்சத்திரங்கள்.. இனிய திருமண யோகம் வந்துவிட்டது.. கல்யாணத்துக்கு தயாராகுங்க!
Marriage Yoga: இந்த 2025 ஆம் ஆண்டு சிலருக்கு திருமணம் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு திருமண யோகம் உண்டாகியுள்ளது. அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Marriage Yoga: நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது அந்த வகையில் புதிதாக பிறந்துள்ள 2025 ஆம் ஆண்டு பல கிரகங்களின் மாற்றங்களை கொடுக்கப் போகின்றது இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
அதேபோல நட்சத்திர இடம் மாற்றங்களும் ஒருவரின் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் அவசியமான முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் எப்போது நடக்கும் என்று யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எதிர்பாராத சில நேரங்களில் திருமணம் நடக்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். இந்த 2025 ஆம் ஆண்டு சிலருக்கு திருமணம் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு திருமண யோகம் உண்டாகியுள்ளது. அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.
அஸ்வினி நட்சத்திரம்
உங்கள் நட்சத்திரத்திற்கேது பகவான் ஆட்சி செய்து வருகின்றார். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கக்கூடியவர்கள் அடிமைத்தனத்தை விரும்பாதவர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கை மாறக்கூடிய ஆண்டாக இருக்கும். மிகவும் சிறப்பான ஆண்டாக அமையப் போகின்றது. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் விருப்பங்களை புரிந்து கொள்ளக்கூடிய வாழ்க்கைத் துணை உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் வாழ்க்கையோடு பரஸ்பர புரிதலோடு இருக்கக்கூடிய வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகிணி நட்சத்திரம்
இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட ஆண்டாக அமைந்துள்ளது. கிரகங்களின் இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சுபம் மாற்றங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடும். அதே சமயம் திருமண யோகம் உங்களுக்கு உருவாக்கி உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். அதற்கு காரணம் கிரகங்களின் மாற்றம் தான் அதே சமயம் திருமண வாழ்க்கையும் உங்களுக்கு மிகவும் நல்ல வாய்ப்பாக அமையக்கூடும். வாழ்க்கையில் ஏற்படும். நல்ல மாற்றங்கள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும்.
மிருகசீரிஷம் நட்சத்திரம்
இந்த 2025 ஆம் ஆண்டு விரும்பிய படி உங்களுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் பகவானால் ஆளும் நட்சத்திரமாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். உங்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமண வாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு செயல்படக்கூடிய நட்சத்திரமாக விளங்கக்கூடிய உங்களுக்கு அனைத்து ஆசைகளும் நிறைவேறும் மிகவும் நேர்த்தியான வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூசம் நட்சத்திரம்
சனிபகவானால் ஆளப்படும் நட்சத்திரமாக நீங்கள் திகழ்ந்து வருகின்றீர்கள். இந்த 2025 புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. திருமண வாழ்க்கையில் நுழையக்கூடியவர்களுக்கு உகந்த ஆண்டாக இந்த 2025 ஆம் ஆண்டு அமையப் போகின்றது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடும் நம்பகத்தன்மை உங்கள் மீது அதிகரிக்கும். அழகான குணங்கள் கொண்ட வாழ்க்கை துணை உங்களுக்கு சிறப்பான முறையில் அமைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த அத்தனை சிக்கல்களும் நிவர்த்தி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.