நேரடியாக பாயப்போகும் சனி.. கும்பத்தில் நடக்கும் இயக்கம்.. சாஷ ராஜ யோகம் பெறப்போகும் ராசிகள் யார் யார்?
தீபாவளிக்கு பிறகு சனி பகவனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம். அதன் முழு விபரத்தை பார்க்கலாம்.
சனி பகவான் கடந்த இரண்டு மாதங்களாக கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். தற்போது தீபாவளி முடிந்திருக்கும் நிலையில் அவரின் போக்கு மாற இருக்கிறது.
பொதுவாக ஜோதிடத்தில், சனியின் இருப்பு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் நேரடியாக வரும் பட்சத்தில், அது எதிர் திசையில் செல்வதை நிறுத்துகிறது. இதனால், மக்கள் வாழ்வில் பல பிரச்சினைகள் நீங்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி தனது ராசியை மாற்றுவார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். 2025 -ல் சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்ற இருக்கிறார்.
நவம்பர் 15 முதல் சனிபகவான் நேரடியாக நகரத் தொடங்குகிறார். பஞ்சமஹா புருஷ ராஜ யோகங்களில் ஒன்றான சாஷ ராஜ யோகத்தை, ஆண்டு முழுவதும் சனி பகவான் கொடுக்க இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நல்ல பலன்கள் கிட்ட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்க்கலாம்.
கடகம்
தீபாவளிக்கு பின் வரும் காலம் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக நடந்து வந்த குழப்பம் குறையத்தொடங்கும். சனி பகவானின் ஆசீர்வாதம் கிடைக்க இருப்பதால், உங்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். எனவே நீங்கள் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
மீனம்
தீபாவளிக்கு பிறகு வரும் நேரம் அற்புதமாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். சில புதிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக விஷயங்களைத் தொடங்க முயற்சிக்க வேண்டும். வியாபாரம் செய்ய சாதகமான சூழ்நிலை அமையும்.
மகரம் தனுசு
சனி பகவான் மீன ராசியில் நுழையும் போது, மகர ராசியில் சனியின் தாக்கம் நீங்கும். ஆகையால், இனிமேல் இது உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் அனைவரிடமும் நல்ல அணுகுமுறையைக் கொண்டிருங்கள். வீண் விஷயங்களில் தலையிட வேண்டாம். காதல் வாழ்க்கையில் உங்கள் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்