Tamil News  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Will Live Prosperously In The New Year By Guru Bhagavan

Guru: குரு லட்சுமி யோகத்தை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 04:45 PM IST

குரு பகவானால் புத்தாண்டில் செழிப்பாக வாழப்போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் குரு பகவான் வரும் மே மாதம் அன்று ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து குருபகவானின் நேரான பயணம் தொடங்கியுள்ளது இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பெறக்கூடிய விளைவுகளை இங்கே காண்போம்.

கடக ராசி

குரு பகவான் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் வெற்றியை கொடுப்பார். வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகளை கொடுப்பார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி

 

குரு பகவான் உங்களுக்கு இந்த புத்தாண்டை நல்ல ஆண்டாக மாற்றப் போகின்றார். இதில் மிக நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல நேரம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.