தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Will Have A Bright Future With Guru Bhagavan

Guru: குரு பார்வையில் நனைய போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 07:30 AM IST

குரு பகவானால் ஒளிமயமான எதிர்காலத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், உள்ளிட்டவர்களுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குருபகவான் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குருபகவான் தற்போது மேஷ ராசியில் நேரான பயணத்தில் இருந்து வருகிறார் .இவருடைய பயணத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். குருவின் நேரான பயணம் உங்களுக்கு பண பலத்தை அதிகப்படுத்த போகின்றது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை இருந்த சிக்கல்கள் உங்களை விட்டு விலகும்.

கடக ராசி

 

குருபகவான் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். எதிர்பாராத நேரத்தில் மாற்றம் இருக்கும். அந்த மாற்றத்தால் உங்களுக்கு சிறப்பான வாழ்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பெயர்களை வாங்கி கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு தான் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண பலத்தில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.