தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Will Be Drenched In The Rain Of Guru Bhagavan Money

Guru Luck 2024: குரு பணத்தைக் கொட்டுவார்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 03, 2024 08:37 AM IST

குரு பகவானின் பண மழையில் நனைய போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இவர் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

குரு பகவான் ரிஷப ராசியில் இடம் மாறிய பிறகு மிருகசீரிடம், ரோகிணி, கார்த்திகை உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குடியேறுகிறார். இதனால் உங்களுக்கு உன் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. உங்களுடைய வார்த்தைகளுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவு அதிகமாகும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் திருமண பாக்கியம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

சுக்கிரனின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண பாக்கியம் கைகூலி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். கூட்டு வணிக முறை உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

மிதுன ராசி

 

குருபகவான் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றார். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடன் சிக்கல்களில் இருந்து நிவர்த்தி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதிநிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

கடக ராசி

 

குருபகவான் மே மாதத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் தொட்ட காரியங்கள் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல பழமை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel