Luck: சம்பவத்திற்கு தயாரான ராகு கேது.. கட்டு கட்டாக பணத்தை எண்ணப் போகும் ராசிகள்
Rahu Ketu: ராகு கேது நன்மைகளை செய்ய போகும் ராசிக்காரர்களை காண்போம்.
நவக்கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் சேர்ந்தே பயணம் செய்வார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகிறார்கள். இதனால் இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
நவகிரகங்கள் அவ்வப்போது இடத்தை மாற்றுவது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு மற்றும் கேது இருவரும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தனக்கென சொந்த ராசி இல்லாதவர்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். ராசி மாற்றங்கள் மட்டுமல்லாது தற்போது ராகு கேது நட்சத்திர மாற்றம் செய்துள்ளனர். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் முதல் பாதத்திலும் இடமாற்றம் செய்துள்ளனர்.
இந்த இடமாற்றத்தால் ராகு கேது பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் அதிரடி யோகத்தை பெறுகின்ற சில ராசிகளை இங்கே காண்போம்.
மேஷ ராசி
ராகு கேது உங்களது ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கின்றனர். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் அனைத்து விதமான பலன்களும் உண்டாக போகின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிம்மதியான வாழ்க்கை அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். திருமண தடைகள் அனைத்தும் விலகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும்.
ரிஷப ராசி
ராகுவும் கேதுவும் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் அமர்ந்து தொழில் ரீதியாக முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றனர். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சில சூழ்நிலைகள் உங்களை வெளிநாட்டில் குடியிருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல்வேறு விதமான தொழில் துறைகளில் முன்னேற்றம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
ராகு கேது இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. படைப்பாற்றல் கொண்ட ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. ஆராய்ச்சி துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். இந்த தொழிலிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு நல்ல பிரதிபலன்கள் இப்போது கிடைக்க கூடிய சூழ்நிலை உண்டாகியுள்ளது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் உங்களால் அதற்கு தீர்வு கிடைக்கும்.
விருச்சிக ராசி
ராகு கேது கிரக நிலை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆன்மீகத்தில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை சூழ்ந்து வரும். இருப்பினும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9