தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Lord Surya Is Going To Give Luck To

Pongal 2024: சூரியன் போல் பிரகாசிக்க போகும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 11:40 AM IST

சூரிய பகவான் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் இருந்து தை மாதத்திற்கு சூரிய பகவான் இடம் மாறுகிறார். வரும் பொங்கல் தினத்தன்று தைவான் தேதியான ஜனவரி 15ஆம் தேதி சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைகிறார்.

சூரிய பகவான் தை 1ம் தேதியான பொங்கல் தினத்தன்று மகர ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அது மகர சங்கராந்தி என அழைக்கப்படுகிறது இது பெரும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் முழுமையான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி 

 

சூரியனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தர போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

சூரியன் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை தரப்போகின்றார். தொழில் மற்றும் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். உங்களுக்கு சாதகமாக அனைத்து காரியங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

சூரியன் உங்களுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பார் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் வெற்றி அடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் லாபத்தில் முடியும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.