தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Have Royal Life Due To The Yoga Of Surya

ராஜயோகத்தோடு வருகிறார் சூரியன்.. அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 03:49 PM IST

சூரியனின் யோகத்தால் ராஜ வாழ்க்கையை பெற்ற ராசிகளை காண்போம்.

சூரிய பெயர்ச்சி,
சூரிய பெயர்ச்சி,

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அந்த வகையில் சூரிய பகவான் சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சூரிய பகவானும் அவருடைய இணைந்துள்ளார். சூரிய பகவானின் இரண்டு புறமும் செவ்வாய் மற்றும் ராகு அமைந்துள்ளனர். இதனால் உபயச்சாரி ராஜயோகம் உருவாகியுள்ளது.

500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ள காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் சூரிய பகவானின் ராஜயோகம் உருவாகி உள்ளது. வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

மகர ராசி

 

சூரிய பகவான் ராஜயோகம் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

கும்ப ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணைகள் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பணம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் நிவர்த்தியாகும். பேச்சு திறமையால் காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்