தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Guru Bhagavan Will Get Lucky From This January

Guru Bhagavan: குருவின் சொர்க்க யோகம் தொடங்கியாச்சு.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 09:49 AM IST

குரு பகவானால் இந்த ஜனவரி மாதம் முதல் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார். தற்போது நேரான பயணத்தில் இருந்து வருகிறார். வரும் மே மாதம் குரு பகவான் இடமாற்றம் செய்ய உள்ளார். மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார்.

குரு பகவானின் இந்த நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. அனைத்து விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

குரு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை தரப்போகின்றார். தொழிலில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். பெற்றோர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும்.

விருச்சிக ராசி

 

குருபகவான் உங்களுக்கு பல சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். அனைத்து விதமான சிக்கல்களும் விலகும். கல்வியில் இருந்த பிரச்சனைகள் முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலனை பெற்றுத் தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.