தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Are Going To Get Royal Life From Lord Mars

Sevvai Peyarchi: செவ்வாயின் அதிர்ஷ்டத்தை பெறுவதற்கு ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 24, 2024 03:45 PM IST

செவ்வாய் பகவானால் ராஜ வாழ்க்கையை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நுழைந்தார் தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானும் நுழைந்த காரணத்தினால் சனியும் செவ்வாயும் சேர்ந்து பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.

சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறப் போகின்றீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பல்வேறு விதமான துறைகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel