தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Signs That Are Going To Get Lucky From Guru Bhagavan

Guru 2024: பணத்தை கொட்டுகிறார் குரு.. இந்த ராசிகளுக்கு யோகம் உச்சம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 09:56 AM IST

குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவான் செல்வம், செழிப்பு, குடும்ப மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். அது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டில் குடியிருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைக்கு மரியாதை அதிகரிக்கும். பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடன் தொல்லைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் வரவில்லை இந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

உங்களுக்கு குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்க போகின்றார். வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கூட்டு வாழ்க்கை முயற்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது.

மிதுன ராசி

 

குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுக்கு விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். கடன் தொல்லையால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சமூகமான சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் சுபமாக முடிவடையும் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel