தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Zodiac Sign People Who Are Going To Enjoy Guru Bhagwan Luck To The Fullest

Guru 2024 Luck: குரு கொட்டும் யோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 08, 2024 09:28 AM IST

குரு பகவான் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிக்காரர்களை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் ராஜ குருவாக குருபகவான் திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவர் தேவர்களின் குருவாக விளங்கி வருகின்றார். இவர் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது செவ்வாய் பகவானின் ராசியாகும். வரும் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. காரியத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் நல்ல மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் விரிவாகும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் நடக்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானம் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel