தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Scenes Of Lord Surya And Lord Saturn Together Giving Good Luck

Lord Surya: சனியும் சூரியனும் சேர்ந்து கொட்டப் போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2024 05:53 PM IST

சூரியன் மற்றும் சனி பகவான் சேர்ந்து அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காணோம்.

சனிபகவான், சூரிய பகவான்
சனிபகவான், சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று மகர ராசியில் சூரிய பகவான் நுழைந்தார்.

அன்றைய தினம் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும் மற்றும் மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சூரிய பகவான் சனிபகவானின் சொந்தமான ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.

இந்த ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

சூரிய பகவானால் உங்களுக்கு பயனுள்ள மாற்றம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாட்டில் நல்ல பண ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக மீண்டும் மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு வருமானத்தை அதிகரிக்க போகின்றது. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்களும் முடிவாகும். நிலுவையில் இருந்து வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கும்ப ராசி

 

சனி பகவானின் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel