தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See The Rasis Where Rahu And Mercury Will Give You Good Results

Rahu Mercury: ராகு புதன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 05:40 PM IST

ராகு மற்றும் புதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகும் ராசிகளை காண்போம்.

ராகு பகவான், புதன் பகவான்
ராகு பகவான், புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் இளவரசன் ஆக விளங்க கூடியவர் புதன் பகவான் புதன் பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். கல்வி, அறிவு, பகுத்தறிவு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார்.

ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். புதன் பகவானும் மீன ராசியில் இணைந்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் ஒன்றிணைந்த பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் மூன்று ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்ப ராசி

 

ராகு மற்றும் புதன் சேர்க்கையானது உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய பேச்சால் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம் ராசி

 

ராகு மற்றும் கேது இணைப்பானது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல காலமாக அமையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நோயால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

இரண்டு கிரகங்களால் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகள் கிடைக்கப் போகின்றது. புதன் மற்றும் ராகு சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் செய்பவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக அமையும். பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.