Lord Siva: கரை புரண்டு ஓடிய ஆற்று வெள்ளம்.. அச்சத்தில் பொதுமக்கள்.. பிரளயத்தை அடக்கிய பிரளயநாதர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Siva: கரை புரண்டு ஓடிய ஆற்று வெள்ளம்.. அச்சத்தில் பொதுமக்கள்.. பிரளயத்தை அடக்கிய பிரளயநாதர்..!

Lord Siva: கரை புரண்டு ஓடிய ஆற்று வெள்ளம்.. அச்சத்தில் பொதுமக்கள்.. பிரளயத்தை அடக்கிய பிரளயநாதர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2025 07:00 AM IST

Lord Siva: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் மூலவராக வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் பிரளயநாதர் எனவும் தாயார் பிரளயநாயகி திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.

Lord Siva: கரை புரண்டு ஓடிய ஆற்று வெள்ளம்.. அச்சத்தில் பொதுமக்கள்.. பிரளயத்தை அடக்கிய பிரளயநாதர்..!
Lord Siva: கரை புரண்டு ஓடிய ஆற்று வெள்ளம்.. அச்சத்தில் பொதுமக்கள்.. பிரளயத்தை அடக்கிய பிரளயநாதர்..!

இது போன்ற போட்டோக்கள்

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது சிவபக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை காலத்தால் அளிக்க முடியாத சரித்திர குறியீடாக திகழ்ந்த வருகின்றன. கோயில்கள் மட்டுமல்லாது தாங்கள் கற்று கட்டிடக்கலை அனைத்தையும் அந்த கோயிலில் புகுத்தி வரலாறுகளை பதித்துவிட்டு சென்றுள்ளனர் மன்னர்கள்.

இன்று வரை அந்த கோயில்களின் கட்டிடக்கலை கண்டு பல ஆராய்ச்சியாளர்கள் வியந்து வருகின்றனர். இது அனைத்திற்கும் காரணம் சிவபெருமான் தான் என கல்வெட்டுகளில் கூறப்படுகின்றன. சிவபெருமான் மீது கொண்ட பக்தியின் காரணமாக அனைத்தும் நிகழ்த்தப்பட்டது என கோயில்களின் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் இருவரும் மிகப்பெரிய எதிரிகளாக இருந்தாலும் சிவபெருமானை இவர்கள் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். ஒருபுறம் பாண்டியர்கள் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலை கட்டி வழிபாடு செய்தனர். மறுபுறம் சோழ மன்னர்களில் மிகப்பெரிய சோழ மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டி வைத்த தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்றுவரை கட்டிடக்கலையின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றது.

இதுபோன்று எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் பல வரலாறுகளை சுமந்து வாழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் மூலவராக வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் பிரளயநாதர் எனவும் தாயார் பிரளயநாயகி திருநாமத்தோடு அழைக்கப்பட்ட வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலில் சுவாமி அம்பாள் இருவரும் தனித்தனி சன்னத்துகளில் அருள் பாதித்து வருகின்றனர். இந்த இரண்டு சன்னதிகளுக்கும் எதிரே நதிகள் காணப்படுகின்றன. இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய விநாயகர் பாலகணபதி என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகின்றார். அவருக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.

வாழ்க்கையில் தப்பிக்க இயலாத சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அனைத்து சிக்கல்களும் நிவர்த்தி அடையும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. இங்கு சிவபெருமானுக்கு இடது புறத்தில் எட்டு கரங்களோடு காட்சியளிக்கும் விஷ்ணு துர்க்கையை வழிபட்டால் மாங்கல்ய தோஷம் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

தல வரலாறு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை பாண்டிய மன்னன் ஒருவர் ஆண்டு வந்தார். மதுரையை ஆண்டு வந்த அந்த பாண்டிய மன்னன் காசியில் இருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வந்தார். அவர் அதனை வைகை ஆற்றின் கரையில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.

ஒரு சமயம் மிகப்பெரிய பிரளயம் அந்த ஆற்றில் ஏற்பட்டுள்ளது. அனைவரும் அழியக்கூடிய சூழ்நிலை அந்த வெள்ளத்தால் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிவபெருமானை வழிபாடு செய்துள்ளனர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அந்த பிரளயத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மிகப்பெரிய பிரளயத்தில் இருந்து மக்களை காப்பாற்றியதால் அவரை மக்கள் பிரளயநாதர் என அழைத்தனர். அதுதான் தற்போது நாம் காணக்கூடிய அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் ஆகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்