தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See Lucky Signs Due To Lord Venus Entering Aquarius

சனியும் சுக்கிரனும் கூட்டணி.. கும்பத்தில் கொட்டும் பணமழை.. ராஜயோக ராசிக்காரர்கள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 03:07 PM IST

Lord Venus: சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் தற்போது சுக்கிரனும் சனியும் சேர்ந்து ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் புகுந்தார். ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது அவரோடு சுக்கிர பகவான் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் தற்போது சுக்கிரனும் சனியும் சேர்ந்து ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டம் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். புதுமண தம்பதிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். அரசு வேலை பார்ப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்களை அவமானப்படுத்திய எதிரிகள் உங்களுக்கு உதவி செய்ய தேடி வருவார்கள். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசிகள் சுக்கிர பகவான் ஏழாவது வீட்டில் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். இந்த காலம் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

WhatsApp channel