Vastu Tips : இந்த தவறை செய்யாதீங்க.. வருமானத்தை அதிகரிக்க.. பண பிரச்சனை தீர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
பணப்பையில் பணத்தை எப்படி வைப்பது என்று தெரியுமா? இதோ வாஸ்து குறிப்பு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
செல்வத்தையும் கௌரவத்தையும் அதிகரிக்க வாஸ்துவில் சில விதிகள் உள்ளன. அதற்கேற்ப சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வருமானத்தை அதிகரிக்க உங்கள் பணப்பையை எவ்வாறு பயன்படுத்தக்கூடாது என்பதைக் பார்க்கலாம்.
பணப்பற்றாக்குறையை குறைக்க பணப்பையை அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது. பணப் பையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். பணப்பை அசுத்தமாக இருந்தால் அது எதிர்மறை ஆற்றலைக் கொண்டு செல்லும். மேலும் பழைய காகிதங்களை அதில் சேமிக்க வேண்டாம். பழைய டிக்கெட்டுகள் மற்றும் பிற சீட்டுகள் இருந்தால், அவ்வப்போது அகற்ற வேண்டும்.
பணப்பையை எங்கும் வைக்கக்கூடாது. அப்படிச் செய்வது துரதிர்ஷ்டத்தைத் தரும். வருமானத்தை அதிகரிக்க பணப்பையை சரியான இடத்தில் வைக்கவும். மேலும் கிழிந்த பணப்பைகளை பயன்படுத்த வேண்டாம். இவை எதிர்மறை ஆற்றல் கொண்டவை. உங்கள் நற்பெயரை அதிகரிக்க நல்ல பணப்பையை பயன்படுத்தவும்.
பலர் தங்கள் பணப்பையில் புகைப்படங்களை வைக்க விரும்புகிறார்கள். அன்புக்குரியவர்கள் மற்றும் கடவுள்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பர்ஸில் புகைப்படங்கள் எதுவும் வைக்காமல் இருப்பது நல்லது.
பொதுவாக பணத்தை வைக்கும் இடம் என்று பார்த்தால் பணப்பெட்டி அல்லது பர்ஸ் தான். இது இரண்டும் தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம். இந்த இரண்டு இடத்திலும் ஒரு பொருளை வைத்தால் பணம் ஈர்த்துக் கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்.
அந்த பொருள்தான் ஏலக்காய். ஏலக்காயை பணப்பெட்டியில் வைத்தால் பணம் பெருகுமாம். அதனால் தான் நம் முன்னோர்கள் பணப்பெட்டியில் வாசனை மிகுந்த ஏலக்காயை வைப்பார்களாம். அதேபோல பச்சை கற்பூரத்தையும் சொல்வார்கள். பச்சை கற்பூரத்தை வைத்தால் பணம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் பச்சை கற்பூரம், ஏலக்காய் மளிகை பூ என மூன்றையும் பணப்பெட்டியில் வைப்பார்களாம்.
இதை வைத்தால் பணம் பெருகும் என்பது நம்பிக்கை. அதேபோல தான் நம் மணி பர்ஸில் ஒரு ஏலக்காய் வைத்தால் பணம் விரயம் ஆகாமல் பன்மடங்கு பெருங்குமாம். நீங்கள் பர்ஸில் இந்த ஏலக்காயை வைக்கும் போது அப்படியே வைக்கக் கூடாது. ஏலக்காயை உடைத்து அந்த கருப்பு பருப்பு வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். பல பேர் இந்த தவறை செய்கிறார்கள்.
ஏலக்காயை அப்படியே வைத்தால் பலன் கிடைக்காது என்பதல்ல. குறைவான பலனை கிடைக்கும் என்பதுதான். எனவே ஏலக்காயை எங்கு பயன்படுத்தினாலும் உடைத்து பயன்படுத்துங்கள்.அந்த ஏலக்காயின் வாசனை எவ்வளவுக்கு எவ்வளவு பெருகுகிறதோ அவ்வளவு நன்மை நமக்கு கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாம்.
ஏலக்காயை அப்படியே வைக்க மனம் இல்லாமல் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மஞ்சள் துணியில் ஏலக்காயை வைத்து வைக்கலாம். இப்படி செய்தால் மஞ்சள் மங்களகரமானது ஏலக்காய் பணத்தை பெருக்கக் கூடியது உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் இருமடங்காக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்