Guru Transit: குரு சூடாகிவிட்டார்.. இனி நவம்பர் வரை இந்த ராசிகள் மீது கொட்டுமாம்.. அதிர்ஷ்ட கதவு திறந்தது யாருக்கு?
Guru Transit: குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டக்காரர்களாக மாறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Transit: குரு பகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், செழிப்பு, சொகுசு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்து மங்களக் காரியங்களுக்கும் காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவர் 12 ராசிகளை கடப்பதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். குருபகவான் 3 மாதங்களுக்கு ஒரு முறை நட்சத்திர பயிற்சி செய்யக் கூடியவர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார். வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டக்காரர்களாக மாறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை தேடி தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் பாராட்டுக்கள் கிடைக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் உயர்வு கிடைக்கும் நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
கடக ராசி
குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். உங்களுடைய செயல் தரும் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
விருச்சிக ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகப்படுத்தும். புதிய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பழைய நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
வேலை உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் வழக்கத்தை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட்டாலும் பின்வரும் காலங்களில் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.