தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. செவ்வாய் பண மழை கொட்டப் போகிறார்.. ஜூலை அதிர்ஷ்டம் வருகிறது

ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. செவ்வாய் பண மழை கொட்டப் போகிறார்.. ஜூலை அதிர்ஷ்டம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 05, 2024 11:47 AM IST

lord Mars: செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளித் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. செவ்வாய் பண மழை கொட்டப் போகிறார்.. ஜூலை அதிர்ஷ்டம்  வருகிறது
ஆசிர்வாதம் பெற்ற ராசிகள்.. செவ்வாய் பண மழை கொட்டப் போகிறார்.. ஜூலை அதிர்ஷ்டம் வருகிறது

lord Mars: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மற்றும் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்

இந்நிலையில் செவ்வாய் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.