தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Luck: தலைகீழாக பணக்கடலில் குதித்த ராசிகள்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் ராசிகள் யார்?

Luck: தலைகீழாக பணக்கடலில் குதித்த ராசிகள்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2024 04:56 PM IST

luck: செவ்வாய் பகவான் இந்த மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். தற்போது குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகங்கள் உருவாகியுள்ளது.

தலைகீழாக பணக்கடலில் குதித்த ராசிகள்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் ராசிகள் யார்?
தலைகீழாக பணக்கடலில் குதித்த ராசிகள்.. குரு செவ்வாய் சேர்ந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தில் அமரப்போகும் ராசிகள் யார்?

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த மே ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். குரு பகவான் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார்.

செவ்வாய் பகவான் இந்த மாதத்தில் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். தற்போது குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகங்கள் உருவாகியுள்ளது. அதனை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையாக அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உண்டாகும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை வந்து சேரும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கப்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இராணுவத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9