தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See About The Zodiac Signs That Guru Venus Joins In Aries To Give Royal Life

குரு சுக்கிரன் மேஷ ராசியில் சேர்ந்தனர்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்களா பாருங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 16, 2024 04:12 PM IST

Guru Venus: குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் குரு பகவானும் சுக்கிர பகவானும் ஒன்று சேர்க்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு சுக்கிரன்
குரு சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் காதல், ஆடம்பரம், செல்வம், சொகுசு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் இடம் மாறக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர்.

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் குரு பகவானும் சுக்கிர பகவானும் ஒன்று சேர்க்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆடம்பர வாழ்க்கை உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும் மனநிலை சீராக மாறும்.

கடக ராசி

 

குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நம்பிக்கை அதிகரிப்பதனால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

ரிஷப ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை சேர்ந்து கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பணம் சேமிப்பதில் தற்போது முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேஷ ராசி

 

குருவும் சுக்கிர பகவானும் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றி வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் சிறந்த வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தனிப்பட்ட திறமைகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel