தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Surya: மிதுனத்தில் மிரட்டல் அடி போடும் சூரியன்.. பணத்தில் பறக்கும் ராசிகள்.. இனி இந்த ராசி ராஜா தான்

Lord Surya: மிதுனத்தில் மிரட்டல் அடி போடும் சூரியன்.. பணத்தில் பறக்கும் ராசிகள்.. இனி இந்த ராசி ராஜா தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 07, 2024 04:49 PM IST

Lord Surya: சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். அதனால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் அதீத பலன்களை பெறப்போகின்றனர்.

மிதுனத்தில் மிரட்டல் அடி போடும் சூரியன்.. பணத்தில் பறக்கும் ராசிகள்.. இனி இந்த ராசி ராஜா தான்
மிதுனத்தில் மிரட்டல் அடி போடும் சூரியன்.. பணத்தில் பறக்கும் ராசிகள்.. இனி இந்த ராசி ராஜா தான்

சூரிய பகவான் ஒவ்வொரு முறை இடமாறும் பொழுதும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். அந்த வகையில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான். புதன் பகவான் என்ற ஆசியான மிதுன ராசிக்கு செல்கிறார்.

சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். அதனால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் அதீத பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குரூப்பில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் சூரிய பகவான் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள் சிறப்பாக பாராட்டுகளை கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கக்கூடும் வணிகத்தில் நல்ல யோகம் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel