தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See About The Signs That Lord Rahu Is Going To Suffer

Lord Rahu: ராகு பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 02:31 PM IST

ராகு பகவான் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

ராகு பெயர்ச்சி
ராகு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் புகுந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார்.

ராகு பகவான் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுவார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிரமமான சூழ்நிலையை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு ராகு பகவானின் தாக்கம் கட்டாயம் இருக்கும். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை அமையும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் அது. காரிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காதல் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி

 

இந்த ஆண்டு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ராகு பகவானின் பார்வை உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறப்பு கவனம் செலுத்தி உடலை பாதுகாத்துக் கொள்வது நல்லது. அலட்சியத்தை தவிர்ப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் ஆழமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் தகராறுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

கும்ப ராசி

 

இந்த ஆண்டு ராகு பகவானால் உங்களுக்கு பல்வேறு விதமான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் பெரிய இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel