தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See About The Rasis That Will Be Ascended By Saturn

Saturn Transit: சனி பிரித்து விட்டார்.. மூட்டையோடு வாரிக் கொள்ளும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 02:55 PM IST

சனிபகவானால் உச்சம் செல்ல போகும் ராசிகள் குறித்து காண்போம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்வதால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. அனைத்து வழிகளில் இருந்து பண வருவாய் இருக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். சுக்கிரனும் சனியும் நட்பு கிரகம் என்பதால் உங்களுக்கு சனி பகவானின் கருணை மிகுதியாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்ததைவிட நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

 

சனிபகவானின் சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. சனிபகவான் உங்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். திடீரென பண வரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்