Tamil News  /  Astrology  /  Lets See About The Rasis That Get Yoga Due To Transit Of Rahu Ketu

Rahu Ketu: சம்பவம் செய்ய தயாரான ராகு கேது.. கோடீஸ்வர யோகம் பெற்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 07, 2024 01:51 PM IST

Rahu Ketu Transit: ராகு கேது இடமாற்றத்தால் யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் ராகு பக்கம் கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர்.

நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இவர்களுடைய நட்சத்திரங்கள் இடம் மாற்றும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். ராகு கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றன. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். காரியத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகின்றனர். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். நீதி சம்மந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ராகு நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நன்மைகளை தரப்போகின்றது. சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நன்மைகளை செய்வார்கள்.

கும்ப ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையக்கூடிய காரியத்தை ராகு கேது பார்த்துக்கொள்வார்கள். தேர்ச்சித் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல்வேறு விதமான சுப பலன்கள் உங்களுக்கு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.