தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See About The Rasis That Get Yoga Due To Transit Of Guru Bhagawan

Guru Peyarchi Luck: குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 28, 2024 10:37 AM IST

குரு இடப்பெயர்ச்சியால் யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் பார்வை ஒரு ராசியின் மீது பட்டால் அவர்களுக்கு கோடி நன்மைகள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார். இது குரு வளையம் என அழைக்கப்படுகிறது.

ரிஷப ராசியில் குடியேறும் குரு பகவான் கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்வார். குரு பகவானின் இந்த ரிஷப ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அபாரமாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குருபகவான் ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீட்டில் குடியேறுகிறார். இதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி

 

குரு பகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் மலைகள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.

மிதுன ராசி 

 

குரு பகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது. விபரீத ராஜயோகம் உங்கள் ராசியில் உருவாக உள்ளதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் வரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்களில் இருந்து நிவர்த்தி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel