Tamil News  /  Astrology  /  Lets See About The Rasis That Get Rajayoga Due To Transit Of Rahu Ketu

Rahu Ketu: ராஜயோகத்தில் குளிக்க வைக்கும் ராகு கேது.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 12:41 PM IST

ராகு கேது பயணத்தால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக ராகம் மற்றும் கேது விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் இருவரும் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள்.

ராசி மாற்றம் மட்டுமல்லாது, இவர்களுடைய மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தார்கள்.

இவர்களுடைய நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு மற்றும் தூது உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த போகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் கைகூடும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் உள்ள முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் ராகு கேது கொடுக்கப் போகின்றனர். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

துலாம் ராசி

 

ராகு கேது சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பொருளாதாரத்தில் நல்ல வரவு இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்களகரமான காரியங்கள் வீட்டில் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.