தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lets See About The History Of Sri Thirukodeeswarar Temple

HT Yatra: ஞானத்தை வழங்கும் திருக்கோடீஸ்வரர்.. நந்தியால் உண்டான தீர்த்தம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 11, 2024 06:30 AM IST

ஶ்ரீ திருக்கோடீஸ்வரர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்

ஶ்ரீ திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்
ஶ்ரீ திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த திருக்கோயில் 12000 பரிசுகள் மற்றும் 3 கோடி மந்திர தேவதைகள் வழிபட்ட கோயிலாக விளங்கி வருகிறது. தலம், தீர்த்தம், மூர்த்தம் என்ற மூன்று பெருமைகளைக் கொண்ட திருத்தலமாக இந்த கோயில் விளங்கி வருகிறது. சரித்திரத்தின் பெருமைகளை உணர்த்தும் வகையில் இந்த கோயிலில் பல்வேறு விதமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

திரி கோடி என்ற பெயரைக் கொண்ட இந்த ஊரில் மூன்று கோடி மந்திர தேவதைகள் கோயிலுக்கு வந்து பூஜை செய்து தங்களது சாபத்தை நீக்கி கொண்டனர். மேலும் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய இறைவனை வணங்கி வரம் பெற்ற காரணத்தினால் திரி கோடி என்பது நாளடைவில் திரு கோடி என பெயர் பெற்று திருக்கோடிகாவல் என தற்போது அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமான் திருகோடீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் திரிபுரசுந்தரி என்ற பெயரில் அருள் பாலித்து வருகிறார். மூன்று கோடி மந்திர தேவதைகளும் 12 ஆயிரம் ரிஷிகளும் ஞான முக்தியை பெறுவதற்காக ஏழுமலையான் சன்னதியில் வழிபாடு செய்து வந்துள்ளனர்.

அங்கே வந்த துர்வாச முனிவர், ஞானத்தை பெறுவதற்கு வழிபாடு மட்டும் போதாது குருவின் ஆசியோடு பிரம்ம ஞானம் பெற வேண்டும். அதற்கு சிவபெருமானின் அருள் வேண்டும் என தெரிவித்துள்ளார். தேவதைகள் மற்றும் முனிவர்கள் சேர்ந்து அவரை ஏளனம் செய்து சிரித்துள்ளனர், கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனால் கோபப்பட்ட துர்வாச முனிவர், பல ஜென்மங்கள் துன்பத்தை பெற்று அதன் பிறகு ஞானத்தை பெறுவீர்கள் என சாபமிட்டார்.

எல்லோரும் திருக்கோடீஸ்வரரை காண்பதற்காக இறைவன் ஆலயம் தேடி வந்தனர். பின்னர் நந்திதேவர் தனது கொம்பினால் பூமியைத் தேடி சிருங்கோத்பவ தீர்த்தத்தை உருவாக்கினார். அந்த தீர்த்தத்தில் நீராடி அனைவரும் ஞானத்தை பெற்று சாப விமோசனம் அடைந்தனர்.

இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு வேண்டிக் கொண்டால் முக்தி அடைந்து ஞானத்தை பெறலாம் என கூறப்படுகிறது. இன்று வரை அது மக்களின் நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.

இந்த கோயில் கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அதே சாலையில் சூரியனின் தளமான சூரியனார் கோயிலும் அமைந்துள்ளது. கஞ்சனூர் செல்லும் சாலையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் திருக்கோட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.